நீண்ட காலங்களாக, மனதில் நினைத்த ஒரு செயலைச் செயல்படுத்த ஆரம்பித்து விட்டேன்..
இந்தியாவில் இருக்கலாமா, வேண்டாமா என்று என்னை முடிவெடுக்கச் செய்யப்போகும் ஓர் மிகப்பெரிய மலையளவு செயலுடைய காரியத்தை நோக்கி மெள்ள அடியெடுத்து வைத்து விட்டேன்...
"இந்தியாவே, பாரதமாதாவே, நாங்கள் நீண்டகாலமாய் உன் கைவிலங்கையொடிப்பதற்குப் பாடுபட்டோம்..அந்தக் காலத்தில் நாங்கள் பட்ட இன்னல்கள் பல, சோதனைகள் ஏராளம்..எங்கள் பாடு அப்படியே நடந்து கொண்டிருந்தாலும், உன் கைவிலங்கை ஒடிப்பதற்கு எங்கள் ரத்தத்தைப் பன்னீராக அபிஷேகம் செய்தோம்.." என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தமுக்கம் மைதானத்தில் முழங்கினார்..
மலையுச்சியில் ஏறிய பிறகு, ஏறும்போது ஏற்பட்ட சிராய்ப்புகளையும், தழும்புகளையும் தடவிப்பார்ப்பதே ஒரு சுகமே.. அந்த சுகத்திற்காகத்தான் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் வலிகளை எதிர்கொள்கிறோம்..அது, நெல்லிக்கனி தின்ற பிறகு, நீரருந்தல் போல், அடித்தொண்டை இனிக்கச் செய்யும் அனுபவம்..
அந்த அனுபவத்தை அடைய, அடியேனுக்கு உங்களுடைய வாழ்த்துக்கள் நிச்சயம் தேவை..
பாரத மாதாவினுடைய அருள் என்னை எடுத்த காரியத்தில் மெள்ள,மெள்ள வெற்றியை நோக்கி நகர்த்திச் செல்லும் என நம்புகிறேன்.. இரண்டு ஆண்டுகள் கழித்து சந்திப்போம் நண்பர்களே... ஓர் வெற்றிச் செய்தியுடன் வருகிறேன்..
By the way, Dreams are not to be divulged, but to be implemented... Soon, I'll divulge it with my success story.. Bye..-R.BALASUNDAR

